தமிழ்த்துறை

எத்திராஜ் மகளிர் கல்லூரி
தமிழ்த்துறை
ஏற்றமிகு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட         தமிழ்மொழித் துறை இன்று அறுபத்தேழு ஆண்டுகளைக் கடந்து வளர்ச்சியுற்ற  நிலையில் முதுகலைத் தமிழ் இலக்கியம் தொடங்கி வெள்ளிவிழா கண்டு வீறுநடையிட்டு இளநிலை முனைவர் ஆய்வுப்படிப்புகளையும் தொடங்கி தமிழ் இலக்கிய உயராய்வுத் துறையாக வளர்ந்து சிறப்போடு செயல்பட்டுவருகிறது.

2006-ஆம் ஆண்டு ழிசிஙிபி உடன் இணைந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடத்தியது. 2011 - ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு        மத்திய நிறுவனத்துடன் இணைந்து ‘செம்மொழி இலக்கியங்களில் வாழ்வியல் அறங்கள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கினை நடத்தியது. 2012 - ஆம் ஆண்டு மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையமும் தமிழ்த்துறையும் இணைந்து ‘அகநானூறு’ என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்        நடத்தியது. 2012 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு        இயக்கத்துடன் இணைந்து உலகத் தமிழ் கல்வி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியது. அதே ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து           ‘தொல்காப்பிய இலக்கணக் கருத்தரங்கம்’ ஒன்றினை நடத்தியது.

வெள்ளிவிழாக் கண்ட தமிழ்த்துறை இவ்வாண்டில் தமிழ் மொழியின் மேன்மையையும் சிறப்பையும் பயன்பாட்டினையும் எடுத்துரைக்கும் நோக்கில் ‘பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ்’ என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்துகிறது

No comments:

Post a Comment