Sunday, August 24, 2014

துறைதோறும் தமிழ் - ஆய்வுக்கட்டுரைகளுக்கான பொருண்மைகள்

துறைதோறும் தமிழ் 
ஆய்வுக்கட்டுரைகளுக்கான பொருண்மைகள்

 

இலக்கியத் துறைகளில் பயன்பாட்டுத் தமிழ்
அறிவியல் துறைகளில் பயன்பாட்டுத் தமிழ்
மொழித் துறைகளில் பயன்பாட்டுத் தமிழ்
கல்வித் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
கணினித் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
இணையத்தில் பயன்பாட்டுத் தமிழ்
வணிகத் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
திரைப்படத் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
தொலைக்காட்சித் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
விளம்பரத் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
வானொலியில் பயன்பாட்டுத் தமிழ்
மொழிபெயர்ப்புத் துறையில் பயன்பாட்டுத் தமிழும்
பத்திரிக்கைத் துறையில் பயன்பாட்டுத் தமிழ்
பிற ஊடகத் துறைகளில் பயன்பாட்டுத் தமிழ்
வேலைவாய்ப்புக் கல்வியில் பயன்பாட்டுத் தமிழ்
வழிபாட்டு மொழியாகப் பயன்பாட்டுத் தமிழ்
அலுவலக மொழியாகப் பயன்பாட்டுத் தமிழ்
நீதித் துறைகளில் பயன்பாட்டுத் தமிழ்
தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பயன்பாட்டுத் தமிழ்
மற்றும் இதுபோன்ற பொருண்மைகளில்
ஆய்வுக்கட்டுரைகள் அமையலாம்.

Friday, August 22, 2014

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள்

கட்டுரையாளர்களின் அன்பார்ந்த வேண்டுகோளிற்கு ஏற்ப கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது..




தங்கள் நினைவுக்கு :
கட்டுரைகள், பதிவுப்படிவங்கள், வரைவோலைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலில் கொடுக்கப்பட்ட நாள் செப்டம்பர் 30, 2014
நீட்டிக்கப்பட்டுள்ள நாள் க்டோபர் 15, 2014






Thursday, August 14, 2014

கிடைக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகள்

கிடைக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகள்


கல்லூரிகளில் இருந்து பெறப்படும் ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரையாளர்களின் பட்டியல் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து இந்தப் பகுதியில் இணைக்கப்படும்.

கட்டுரையாளர்கள் வலைப்பூவினைப் பார்த்தே பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.



செய்திகளில் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தரங்கம்

செய்திகளில் 
தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தரங்கம்
============

 
பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
17/08/2014

=====================

வெள்ளி விழா காணும் சென்னை எத்திராஜ் கல்லூரி தமிழ்த்துறை.. 
பன்னாட்டு கருத்தரங்கம் 
Posted by: Sudha Published: Tuesday, August 5, 2014, 15:29 [IST] 
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் வெள்ளி விழா ஆண்டில், பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந. அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேஸ்வரி, பேராசிரியை முனைவர். பா. கெளசல்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்றமிகு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்மொழித் துறை இன்று அறுபத்தேழு ஆண்டுகளைக் கடந்து வளர்ச்சியுற்றிருக்கிறது. வெள்ளி விழா காணும் சென்னை எத்திராஜ் கல்லூரி தமிழ்த்துறை.. பன்னாட்டு கருத்தரங்கம் வெள்ளிவிழாக் கண்ட தமிழ்த்துறை இவ்வாண்டில் தமிழ் மொழியின் மேன்மையையும் சிறப்பையும் பயன்பாட்டினையும் எடுத்துரைக்கும் நோக்கில் ‘பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ்'என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்துகிறது. இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், பேராளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பிற துறை நிபுணர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பங்கேற்று, தமிழை எந்தெந்தத் துறைகளிலெல்லாம் இன்னும் வலிமையுடன், வளமுடன், முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து தம் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பிச் சிறப்பிக்க வேண்டுகிறோம். பயன்பாட்டுத் தமிழுக்கு தங்களால் இயன்ற பங்கினை ஆற்றிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். 
Topics: chennai, ethiraj college, tamil, literature, seminar, சென்னை, தமிழ், கருத்தரங்கம் 
English summary An International seminar has been arranged on Tamil language in Ethiraj College, Chennai on the silver jubilee year of the Tamil department.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/international-seminar-on-tamil-language-ethiraj-college-207762.html

எத்திராஜ் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை

எத்திராஜ் மகளிர் கல்லூரி
தமிழ்த்துறை

ஏற்றமிகு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட         தமிழ்மொழித் துறை இன்று அறுபத்தேழு ஆண்டுகளைக் கடந்து வளர்ச்சியுற்ற  நிலையில் முதுகலைத் தமிழ் இலக்கியம் தொடங்கி வெள்ளிவிழா கண்டு வீறுநடையிட்டு இளநிலை முனைவர் ஆய்வுப்படிப்புகளையும் தொடங்கி தமிழ் இலக்கிய உயராய்வுத் துறையாக வளர்ந்து சிறப்போடு செயல்பட்டுவருகிறது.

2006-ஆம் ஆண்டு ழிசிஙிபி உடன் இணைந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடத்தியது. 2011 - ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு        மத்திய நிறுவனத்துடன் இணைந்து ‘செம்மொழி இலக்கியங்களில் வாழ்வியல் அறங்கள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கினை நடத்தியது. 2012 - ஆம் ஆண்டு மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையமும் தமிழ்த்துறையும் இணைந்து ‘அகநானூறு’ என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்        நடத்தியது. 2012 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு        இயக்கத்துடன் இணைந்து உலகத் தமிழ் கல்வி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியது. அதே ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து           ‘தொல்காப்பிய இலக்கணக் கருத்தரங்கம்’ ஒன்றினை நடத்தியது.

வெள்ளிவிழாக் கண்ட தமிழ்த்துறை இவ்வாண்டில் தமிழ் மொழியின் மேன்மையையும் சிறப்பையும் பயன்பாட்டினையும் எடுத்துரைக்கும் நோக்கில் ‘பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ்’ என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்துகிறது

பதிவுப்படிவம்

பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்
பன்னாட்டுக் கருத்தரங்கம் 
நவம்பர் 25, 26 - 2014
எத்திராஜ் மகளிர் கல்லூரி, 
சென்னை 
பதிவுப்படிவம்

1.    பெயர் : ..................................................................................

2.    கல்வித்தகுதி : ........................................................................

3.    இனம் : ஆண்        / பெண்

4.    பணிபுரியும் / பயிலும் நிறுவன முகவரி :


.................................................................................................................................................................................................................................................................................................................5.  


தொடர்பு முகவரி :

................................................................................................................................................................................................................................................................................................................6.  


தொலைபேசி எண் : ..................................................................

7.    கைபேசி எண் : ......................................................................

8.    மின்னஞ்சல் : .........................................................................

9.    வரைவோலை எண் : .......................    நாள் : .....................        

வங்கியின் பெயர் : .........................

10.    கட்டுரைத் தலைப்பு : ...................................................................................................................................................................

இடம் :

நாள் :
கையொப்பம்

                           (இப்படிவத்தை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்)